ஊராட்சி மன்றத் தலைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

 

ஊராட்சி மன்றத் தலைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

குடவாசல் அருகே கடன் பிரச்னையால் ஊராட்சி மன்றத் தலைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(45). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். தேர்தலில் ஜெயித்த பிறகு அதை கொடுக்க முடியாமல் தவிர்த்து வந்திருக்கிறார்.

ஊராட்சி மன்றத் தலைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

இந்த நிலையில், நெடுஞ்சேரியில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் முருகானந்தம் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முருகானந்தம் அதிகமாக கடன் வாங்கி இருந்ததும் கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததும் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

முருகானந்தம் கடன் பிரச்னையால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.