“ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றியது சந்தோஷமாக இருக்கிறது” : பட்டியலின பஞ்சாயத்து தலைவி

“ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றியது சந்தோஷமாக இருக்கிறது” : பட்டியலின பஞ்சாயத்து தலைவி

கடந்த 15 ஆம் தேதி 74வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது நாட்டின் பிரதமர் முதல் மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு பணியாளர்கள் என அவரவர் தங்களுக்கு உரிமையான இடங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் ஆத்துபாக்கம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர் அமிர்தத்தின் உரிமையோ அன்றைய நாள் பறிக்கப்பட்டுள்ளது.

“ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றியது சந்தோஷமாக இருக்கிறது” : பட்டியலின பஞ்சாயத்து தலைவி

அமிர்தம் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் குடியரசு தின விழாவிலும் அவரின் உரிமை பறிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஊடகங்களின் முயற்சியினால் இந்த விவகாரம் மனித உரிமை ஆணையம் வரை சென்றது.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி மற்றும் எஸ் பி அரவிந்தன் முன்னிலையில் இன்று ஊராட்சி மன்ற தலைவி அமிர்தம் தேசியக்கொடி ஏற்றியதுடன் ஊராட்சி மன்ற அலுவகத்தில் உள்ள தனது இருக்கையில் அமர்ந்தார்.

“ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றியது சந்தோஷமாக இருக்கிறது” : பட்டியலின பஞ்சாயத்து தலைவி

இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், “ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றியது சந்தோஷமாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு அந்த உரிமை கிடைத்திருப்பது  மகிழ்ச்சியை தந்துள்ளது” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.