ஒரே வீட்டில் 100க்கும் மேற்பட்ட நாகப் பாம்புகள் !! கிராமவாசிகளுக்கு காப்ரா கொடுத்த கோப்ராக்கள் !

 

ஒரே வீட்டில் 100க்கும் மேற்பட்ட நாகப் பாம்புகள் !! கிராமவாசிகளுக்கு காப்ரா கொடுத்த கோப்ராக்கள் !

மத்திய பிரதேசத்தின் ரான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினுள் 123 குட்டி நாகப்பாம்புகள் இருந்துள்ளது. சில குடும்ப உறுப்பினர்களை வேறொரு கிராமத்திற்கு தப்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, மத்திய பிரதேசத்தின் ரான் கிராமத்தில் 123 விஷ நாகங்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளன. இதனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு இரவும் பாம்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். ஒரே சமயத்தில் இத்தனை பாம்புகள் வந்துள்ளதால் தெய்வக் குத்தம் நடந்துவிட்டதோ என அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஒரே வீட்டில் 100க்கும் மேற்பட்ட நாகப் பாம்புகள் !! கிராமவாசிகளுக்கு காப்ரா கொடுத்த கோப்ராக்கள் !
இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரும் பாம்புகள் கிராமத்தில் வலம் வருவதாகவும், காலையில் மீண்டும் அந்த வீட்டிற்குள் சென்றுவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடு ஜீவன் சிங் குஷ்வா என்பவருக்கு சொந்தமான வீடு. அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள் வேறொரு கிராமத்திற்கு குடிபெயர்ந்ததால், அந்த விட்டில் பாம்புகள் வசிக்கத் தொடங்கிவிட்டது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாம்புகளையும் பிடித்து வனச்சரகத்தில் விட்டுவிட வனத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பாம்புகள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு குஞ்சு பொரித்ததாகத் தெரிகிறது. இளம் நாகப்பாம்புகள் பெரிய பாம்பைப் போலவே நச்சுத் தன்மையுடையவை, மேலும் அவை மிகவும் ஆபத்தானவை. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான குட்டி நாகப்பாம்புகள் தரையின் கீழ் சுருண்டு கிடப்பதைக் கண்டதாக குஷ்வா கூறினார். அவைகளில் 51ஐ அவர்கள் பிடித்தனர், ஆனால் பின்னர் ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் ஆறு பாம்புகள் ஊர்ந்து சென்றன. “என் வீட்டிற்குள் இந்த இளம் நாகப்பாம்புகளும் வெளியே கொரோனா வைரஸும் உள்ளன. நான் எங்கேசெல்வேன்?” என வீட்டின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.