மாரடைப்பைப் போல அறிகுறியை வெளிப்படுத்தும் பேனிக் அட்டாக்!

 

மாரடைப்பைப் போல அறிகுறியை வெளிப்படுத்தும் பேனிக் அட்டாக்!

சிலருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது போல இருக்கும், அவர்கள் வெளிப்படுத்தும் எல்லா அறிகுறியும் அவர்களுக்கு மாரடைப்பு வந்ததைப் போலவே இருக்கும், ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவர்கள் இயல்பாக இருப்பதாக தெரியவரும். நம் கண் முன்பாக நெஞ்சுவலி என்று துடித்தால், ஆனால் அவருக்கு நெஞ்சுவலி இல்லை என்கிறார்களே என்று பலரும் குழம்பிப்போவார்கள். இப்படி மாரடைப்பு போல அறிகுறிகளை வெளிப்படுத்தும் மற்றொரு பாதிப்புக்கு பேனிக் அட்டாக் என்று பெயர்.

மாரடைப்பைப் போல அறிகுறியை வெளிப்படுத்தும் பேனிக் அட்டாக்!
MODEL RELEASED. Young woman with her hand on her chest.

இரண்டுக்கும் அறிகுறிகள் ஒன்றாக இருந்தாலும் பேனிக் அட்டாக்கால் பாதிப்பு இல்லை. ஆனால், மாரடைப்பு என்பது உயிரைக் கொல்லக் கூடியது. பேனிக் அட்டாக், மாரடைப்புக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைத் தெரிந்துகொள்வோம்.

மாரடைப்பு என்பது இதயத் தசைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வருவதாகும். இதன் அறிகுறிகள் நெஞ்சு வலி, நெஞ்சில் பாரம், சுவாசித்தலில் சிரமம், அதிக வியர்வை, குமட்டல் போன்றவை இருக்கும்.

அதீத மன அழுத்தம், மனப் பதற்றம் இருக்கும் நேரத்தில் பேனிக் அட்டாக் ஏற்படும். இதிலும், நெஞ்சு வலி, இதயத்தில் எடை அதிகரித்தது போன்ற உணர்வு, வியர்வை, மரண பயம், மயக்கம், குமட்டல், உடல் சில்லிட்டுப் போதல் போன்றவை ஏற்படும்.

நெஞ்சுவலி எப்பது எப்போதாவது வரலாம். அது மிகவும் தீவிர பாதிப்பைத் தரும். ஆனால், பேனிக் அட்டாக் அப்படி அல்ல. அடிக்கடி வரலாம். 20, 30 வயதினருக்குக் கூட பேனிக் அட்டாக் வரலாம்.

மன அழுத்தம் மற்றும் மனநல பாதிப்புகள்தான் பேனிக் அட்டாக் வர முக்கிய காரணம். இதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பேனிக் அட்டாக் பாதிப்பைத் தடுக்க முடியும். அடிக்கடி பேனிக் அட்டாக் வந்து பயத்தை தருவதைத் தடுக்க மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். எதனால் பேனிக் அட்டாக் வருகிறது என்பதை கண்டறிந்து அது பற்றிய பயத்தை நீக்க முயற்சிக்க வேண்டும். இதை எதிர்கொள்ள சைக்கோதெரப்பி மற்றும் மாத்திரை மருந்துகள் பல உள்ளன.