தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்தர ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமனம்

 

தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்தர ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமனம்

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வணிக வரித்துறைக்கு அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக இருந்து வரும் ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்தர ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமனம்

வருவாய் நிர்வாக ஆணையராகவும் இருந்த ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார். இதேபோல் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துணை ஆணையராக இருந்து வரும் பணீந்திர ரெட்டி, மறு உத்தரவு வரும்வரை கூடுதலாக அந்த பொறுப்பிலும் நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. நில நிர்வாக ஆணையரான பங்கஜ் குமார் பன்சால், மின்சார வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.