“வாழ்க்கையை ஜாலியாக வாழ நினைத்த மனிதர்” – பாண்டியா பிரதர்ஸின் தந்தை மறைவு!

 

“வாழ்க்கையை ஜாலியாக வாழ நினைத்த மனிதர்” – பாண்டியா பிரதர்ஸின் தந்தை மறைவு!

ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்சு பாண்டியா மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு இர்பான் பதான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் இந்தியா திரும்பிய ஹர்திக் பாண்டியா உள்நாட்டில் வேறு எந்தத் தொடரிலும் விளையாடவில்லை. சையத் முஷ்டாக் தொடரில் பரோடா அணியின் கேப்டனாகச் செயல்பட்டுவந்த குருணால் பாண்டியா, தந்தையின் இறுதிச்சடங்குக்காக அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது.

“வாழ்க்கையை ஜாலியாக வாழ நினைத்த மனிதர்” – பாண்டியா பிரதர்ஸின் தந்தை மறைவு!

சிறு வயதிலேயே பாண்டியா சகோதரர்களின் கிரிக்கெட் கரியருக்காக தன்னுடைய தொழிலையே வேறு இடத்திற்கு மாற்றியவர் ஹிமான்சு பாண்டியா. உறவினர்களின் விமர்சனங்களையும் தாண்டி தனது மகன்களைக் கிரிக்கெட்டில் சேர்த்துவிட்டு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தார். அவரின் மறைவு நிச்சயம் பாண்டியா சகோதரர்களுக்கு அதிக வலியைக் கொடுக்கும்.

இதுதொடர்பாக ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கும் விராட் கோலி, “ ஹர்திக், குருணால் பாண்டியாவின் தந்தை மரணச் செய்தி கேட்டு மனம் உடைந்தேன். அவரிடம் இரண்டு முறை பேசியிருக்கிறேன். அவர் வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ நினைத்த மனிதர்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் பிரிவிலிருந்து மீள பாண்டியா சகோதரர்களுக்கு மன வலிமையைக் கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இர்பான் பதான் தனது ட்விட்டரில், “மோடிபாக்கில் தான் முதல் முறையாக ஹிமான்சு பாண்டியாவைச் சந்தித்தேன். தனது மகன்கள் கிரிக்கெட்டில் உயர்ந்த நிலையை அடைய அவர் ஆசைப்பட்டார்.

பாண்டியா சகோதரர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான நேரத்தைக் கடந்துசெல்ல கடவுள் உங்களுக்கு மனோதிடத்தை அளிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.