‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை கவலைக்கிடம் : சோகத்தில் சக நடிகர்கள்!

 

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை கவலைக்கிடம்  : சோகத்தில் சக நடிகர்கள்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகையின் உடல்நிலை மோசமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை கவலைக்கிடம்  : சோகத்தில் சக நடிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் மக்களின் கவனம் பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, விஜே சித்ரா, குமரன், வெங்கட் ,ஹேமா ,சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 300 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கூட்டுக்குடும்பம் பற்றி பேசுகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை கவலைக்கிடம்  : சோகத்தில் சக நடிகர்கள்!

இந்நிலையில் இந்த சீரியலில் சமீபத்தில் இணைந்த நடிகை கௌசல்யா செந்தாமரை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கதையில் மீனா என்ற கதாபாத்திரத்திற்கு பாட்டியாக நடித்து வந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை கவலைக்கிடம்  : சோகத்தில் சக நடிகர்கள்!

முன்னதாக ஜீ தமிழில் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வந்த இவர் அண்மையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை கவலைக்கிடம்  : சோகத்தில் சக நடிகர்கள்!

நடிகை கௌசல்யா செந்தாமரை, குணசித்திர நடிகரும், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவருமான மறைந்த பிரபல நடிகர் செந்தாமரையின் மனைவி ஆவார். இவர் திருடாதே, வயசு பசங்க , வருத்தப்படாத வாலிபர் சங்கம் என குறிப்பிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கௌசல்யா செந்தாமரை உடல்நலக்குறைவு என்ற செய்தி சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.