கொரோனா எதிரொலியால் ககன்யான், சந்திரயான் 3 திட்டம் ஒத்திவைப்பு – இஸ்ரோ

 

கொரோனா எதிரொலியால் ககன்யான், சந்திரயான் 3 திட்டம் ஒத்திவைப்பு – இஸ்ரோ

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு முன் ரோபோ ஒன்றை அனுப்பி ஒத்திகை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி  வியோ மித்ரா எனும் பெண் ரோபோவை முன்னோட்டமாக விண்ணுக்கு செல்லவிருந்தது. இந்த ஆண்டுக்குள் விண்ணிற்கு செலுத்தப்பட இருந்த ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கொரோனா எதிரொலியால் ககன்யான், சந்திரயான் 3 திட்டம் ஒத்திவைப்பு – இஸ்ரோ
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நிதி பிரச்னை காரணமாக ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சிவன் தெரிவித்துள்ளார். இதேபோல் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படுத்துவதாக இருந்த சந்திராயன் 3 திட்டமும் ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.