ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை : கம்பி எண்ணும் பா.ம.க நிர்வாகி!

 

ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை : கம்பி எண்ணும் பா.ம.க நிர்வாகி!

திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற செயலாளரை தற்கொலைக்கு தூண்டிய பாமக ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்படுகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பூர் அடுத்த மேல்நல்லத்தூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கர். இவர் கடந்த 5ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றிய போது, அங்கு ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு பாமக ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபு தான் காரணம் என பாஸ்கரன் எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது.

ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை : கம்பி எண்ணும் பா.ம.க நிர்வாகி!

இதையடுத்து தனது கணவனின் மரணத்திற்கு காரணமான ஹரிபாபு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஸ்கரனின் மனைவி திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவான ஹரிபாபுவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதியில் ஹரிபாபு பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ஒகேனக்கலுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.