‘தரையில் அமர வைத்து’ பட்டியலினப் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமரியாதை!

‘தரையில் அமர வைத்து’ பட்டியலினப் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமரியாதை!

கடலூர் அருகே பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர், தரையில் அமர வைத்த அவமரியாதை செய்யப்பட்டிருப்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘தரையில் அமர வைத்து’ பட்டியலினப் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமரியாதை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், துணைத் தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘தரையில் அமர வைத்து’ பட்டியலினப் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமரியாதை!

ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக் கூறி தேசியக்கொடி ஏற்ற விடாமல் அவமரியாதை செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரம் ஊடகத்தின் வெகுவாக பரவிய நிலையில், அமிர்தத்தை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அமிர்தம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், தேசியக் கொடியை ஏற்றி தனது உரிமையை நிலைநாட்டினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.