மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போராட்டம்

 

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போராட்டம்

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து,
திண்டுக்கல் ஊராட்சி மன்றக்கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, தீர்மான நகலை கிழித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒதுக்கிய நிதியில் ரூ.50 லட்சத்தை, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சாலைகள் அமைக்க ஊராட்சி மன்ற அனுமதி இல்லாமல் மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் கூட்டம் தீர்மானத்தில் கொண்டு வரப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்ற தலைவர் ராஜா தலைமையில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, நுழைவாயில் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீர்மான நகலை கிழித்துப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போராட்டம்