நிதி ஒதுக்கக் கோரி, ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி தலைவர்கள்!

நிதி ஒதுக்கக் கோரி,  ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட  ஊராட்சி தலைவர்கள்!

ஊராட்சி பணிகளுக்கு பல மாதங்களாக நிதி ஒதுக்கவில்லை என கூறி, காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

நிதி ஒதுக்கக் கோரி,  ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட  ஊராட்சி தலைவர்கள்!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு பல மாதங்களாக நிதி ஒதுக்கவில்லை என்பதால், ஊராட்சி பணிகள் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மாதத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே, ஒதுக்கப்படுவதால், ஊராட்சி பணிகளை செய்ய முடியவில்லை என ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

நிதி ஒதுக்கக் கோரி,  ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட  ஊராட்சி தலைவர்கள்!

இது தொடர்பாக, மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், 42 ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர். ஊராட்சி மன்ற தலைவர்களே போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.