கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி- போலீசார் வழக்குப் பதிவு

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி- போலீசார் வழக்குப் பதிவு

தர்மபுரி மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி மற்றும் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, அடிலம் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் தீபா. பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரவும், கிராம சுகாதாரத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கக் கோரி பஞ்சாயத்து துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி- போலீசார் வழக்குப் பதிவு

அவர்கள் அனைவரும் கூட்டமாக, வந்ததால், போலீசார் அனுமதிக்க மறுத்த நிலையில், போலீசார் சிலரை மட்டும் அனுமதித்துள்ளனர்.
ஆட்சியரை சந்திக்க முடியாத நிலையில், மனுவை கொடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அவர்களிடம் வாக்குவாதம் செய்த தீபா, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அவரை போலீசார் தடுத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்த நிலையில், பஞ்சாயத்து தலைவர் தீபா, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி- போலீசார் வழக்குப் பதிவு

இதனைக் கண்டித்து அடிலம் ஊராட்சி மன்ற அலுவலம் முன், அவரது ஆதரவாளர்கள் திரண்டு முற்றுகை போராட்டம் செய்தனர். இந்த சம்பவங்களால் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலம், அடிலம் பஞ்சாயத்து ஆகிய இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.