• April
    06
    Monday

Main Area

Main



பான் - ஆதார் இணைக்க நாளையே கடைசி! எப்படி இணைப்பது?

Pan- Aadhaar
Pan- Aadhaar

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளையே கடைசி நாள் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பான் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டும் என்று சில வருடங்களாகவே வருமான வரித்துறை கூறிவருகிறது. பெரும்பாலானவர்கள் பான்-உடன் ஆதாரை இணைத்துவிட்ட பிறகும் ஒரு சிலர் இன்னும் இணைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அனைவரும் பானுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 30 என்று அறிவிக்கப்பட்டு பிறகு காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 

pan- aadhaar

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? 

1. வருமான வரித் துறை இணைய தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும் (https://www.incometaxindiaefiling.gov.in/home)

2. அதன் இடதுபுறத்தில் உள்ள Link Aadhaar என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது உங்களுக்கு புதிதாக ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கும்.

4. அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் கட்டத்தில் உங்களது பான் எண்ணை நிரப்ப வேண்டும். இரண்டாவது கட்டத்தில் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.

5. மூன்றாவது கட்டத்தில் ஆதாரில் உங்களது பெயர் எப்படியிருக்கிதோ அதனை அப்படியே எழுத வேண்டும்.

6.கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சா கோடை (captacha code) நிரப்ப வேண்டும்

7. பார்வையற்றவர்களின் வசதிக்காக கேப்சா கோடிற்கு பதிலாக ஒன் டைம் பாஸ்வேர்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கேப்சா கோடை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஒன் டைம் பாஸ்வேர்டு வசதியை பயன்படுத்தலாம்'

8. இதனை நிரப்பிட்டு லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் உங்களது ஆதார் பான் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும்.
 

2018 TopTamilNews. All rights reserved.