ஆதார் – பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு!

 

ஆதார் – பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக கடந்த சில வருடங்களாகவே இழுபறி நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பயனர்களுக்கு வருமான வரித்துறை நிறைய முறை காலக்கெடு விதித்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் பின்னர் இந்த காலக்கெடு நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், ஆதார் எண்ணை பான் கார்டுடன் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் செலுத்த நேரிடும் என்று என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையில் கொரோனா வந்ததால் இந்த காலக்கெடு ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ttn

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2018-19 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2019-20 கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் – பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்தில் சென்று இணைக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.