ஆதார் – பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு!

 

ஆதார் – பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரிப்பதை நம்மால் காண முடிகிறது. தற்போதைய சூழ்நிலையில் அரசு இயந்திரம் பாதி முடங்கியுள்ளது. இந்நிலையில் , மத்திய அரசு இன்சூரன்ஸ் , ஓட்டுனர் உரிமம் , போன்ற உரிமங்களின் காலக்கெடுக்களை நீடித்து வருகிறது. அதே போல் , பான் – ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் அளித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை 2021 மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ttn

பான் கார்டு மோசடியால் வருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் நோக்கில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்தில் சென்று இணைக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.