பாம்பன் பாலத்தில் சிக்கிய மிதவையை மீட்க 6-வது நாளாக போராட்டம்

 

பாம்பன் பாலத்தில் சிக்கிய மிதவையை மீட்க 6-வது நாளாக போராட்டம்

ராமநாதபுரம்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவையை மீட்க இன்று 6-வது நாளாக ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. பாம்பன்பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி வீசிய பலத்த காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவை மோதியதுடன், அதன் மீது பொருத்தப்பட்டிருந்தகிரேனுடன் பாலத்தின் அடியில் சிக்கியது. இதனை மீட்க கட்டுமான பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கடந்த 6 நாட்களாக பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டு வந்தனர். ஆயினும் மிதவையை மீட்க முடியமால் ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

பாம்பன் பாலத்தில் சிக்கிய மிதவையை மீட்க 6-வது நாளாக போராட்டம்

இதனிடையே பாம்பன் பகுதியில் இன்று பலத்த காற்றுமற்றும் கடல் சீற்றத்துடன் மழை பெய்து வந்தது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து வாரணவாசி நோக்கி புறப்பட்ட விரைவு ரயில் பாம்பன் பாலத்தில்வந்தபோது, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ரயில்வே ஊழியர்களும், கட்டுமான ஊழியர்களும் ரயில் இன்ஜினை எச்சரிக்கையுடன் கண்காணித்தனர். அப்போது,எந்தவித பிரச்சினையும் இன்றி பலத்த கடல் சீற்றத்திற்கு மத்தியல் வாரணாசி விரைவு ரயில் பாம்பன் பாலத்தைக் கடந்து சென்றது.