‘இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’ : அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

‘இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’ : அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சந்திப்பு நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு அரங்கேறியுள்ளது.

‘இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’ : அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

இந்நிலையில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடர வேண்டும் என்றும் தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்திற்கு எதிரான பிரிவை நீக்க மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

‘இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’ : அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

இதனிடையே விவசாயத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின் இணைப்புகளின் பயன்பாட்டை அறிய மீட்டர் கருவி பொருத்தும் பணி நடைபெற்றது. மின் இணைப்புக்கு கட்டணம் வாங்க தான் அந்த மீட்டர் பொருத்தப்படுகிறது என்று விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதே போல, விவசாயிகள் 5 குதிரை திறனுக்கு மேல் மோட்டார் பயன்படுத்தினால் ரூ.20,000 செலுத்த வேண்டும் என்றும் மின்வாரியம் அறிவித்தது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக கடலூர் மாவட்ட விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அதிர்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.