`காமராஜரை போன்று தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன்!’- முதல்வர் பழனிசாமி

`காமராஜரை போன்று தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன்!’- முதல்வர் பழனிசாமி

“தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கர்ம வீரர்” என்று அன்போடு அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடும் இவ்வேளையில், அவரைப் பற்றி நினைவு கூர்வதை பெருமையாகக் கருதுகிறேன்” என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

`காமராஜரை போன்று தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன்!’- முதல்வர் பழனிசாமி

1954ம் ஆண்டில், அப்போதைய சென்னை மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ் சமுதாயத்தை படிப்பறிவு மிக்க அறிவார்ந்த சமுதாயமாக வித்திட்டவர் காமராஜர் என்று கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, பல தொழிற்சாலைகளை நிறுவி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அதேபோன்று, நீர்வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் பல அணைகளை கட்டிய பெருமைக்குரியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

காமராஜரின் எளிமை, தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே வசீகரித்து இருக்கிறது என்று கூறியுள்ள முதல்வர், தன்னை பெற்ற தாயின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பை போலவே, பெருந்தலைவர் காமராஜர் தாய்த்திருநாட்டின் மீதும் மிகுந்த பற்று வைத்திருந்தார் என்று கூறியுள்ளார்.

`காமராஜரை போன்று தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன்!’- முதல்வர் பழனிசாமி

“தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம், நீர்வளத்தில் முன்னேற்றம் என தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது அனைத்து துறைகளிலும் முத்திரையை பதித்த பெருந்தலைவர் காமராஜரை போன்று அரசும் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று பீடு நடைபோடும்” என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.