‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக’ பழனிசாமியை அறிவித்தார் ஓபிஎஸ்!

 

‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக’ பழனிசாமியை அறிவித்தார் ஓபிஎஸ்!

முதல்வர் வேட்பாளர் பற்றிய குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் அதிமுகவில் நீடித்தது. ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓபிஎஸ் தான் போட்டிடுவார் என ஒரு தரப்பும் சசிகலாவால் கைகாட்டப்பட்ட ஈபிஎஸ் தான் போட்டியிடுவார் என மற்றொரு தரப்பும் மல்லுக்கட்டி வந்தது. அதுமட்டுமில்லாமல், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு இடையிலேயே கடும் வாக்குவாதம் எழுந்தது.

‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக’ பழனிசாமியை அறிவித்தார் ஓபிஎஸ்!

அதனால் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படுவதாக அறிவித்த அதிமுக தலைமை, 7ம் தேதி(இன்று) யார் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி போட்டியிடுவார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.