“பழனியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை” – ஆட்சியர் விஜயலட்சுமி

“பழனியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை” – ஆட்சியர் விஜயலட்சுமி

திண்டுக்கல்

பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

“பழனியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை” – ஆட்சியர் விஜயலட்சுமி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான மலைக்கோயிலில் தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 29ஆம் தேதி மாலை 06.05 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விளாபூஜையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து திருஆவினன்குடி மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில்களில் தீபம் ஏற்றுதல் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

“பழனியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை” – ஆட்சியர் விஜயலட்சுமி

மேலும், திருகார்த்திகை தினமான 29ஆம் தேதி அன்று விழா நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோயில் ஆகமவிதிகளின்படி நடக்கும் என்று தெரிவித்துள்ள ஆட்சியர் விஜயலட்சுமி, கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றி கார்த்திகை தீபம் ஏற்றுதலின் போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், கார்த்திகை தினத்தன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் தொலைக்காட்சி, பேஸ்புக் மற்றும் யூடியூப் வழியாக நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“பழனியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை” – ஆட்சியர் விஜயலட்சுமி

மேலும், திருக்கார்த்திகை அன்று அதிகாலை 4 மணி முதல் 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் வீதம் www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள ஆட்சியர் விஜயலட்சுமி, நண்பகல் 12 மணிக்கு பின்பு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.