• February
    27
    Thursday

Main Area

Main



சீறிப்பாய 700 காளைகளுடன், அடக்க 923 வீரர்களுடன் தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு !

palamedu jallikattu
palamedu jallikattu

மாட்டுப் பொங்கல் தினமான இன்று, மிகவும் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க 700 காளைகளுக்கு டோக்கன்களும், 923 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டிற்குப் பாதுகாப்புக்காக 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்காக 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸும், காளைகளுக்காக 3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸும் தயார் நிலையில் உள்ளது. 

ttn


 
அதே போல, வாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை 40 பேர் கொண்ட  கால்நடை மருத்துவக் குழு பரிசோதனை செய்த பின்னரே அனுப்பப்படுகின்றன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் வெற்றி பெறுவதற்காக மது, போதைப்பொருள் ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்றும் மாடுகளுக்கு உடலில் வேறு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளதா என்றும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பண்பாடு மற்றும் வீரத்தை நிலைநாட்டும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்து களத்தில் விளையாடும் காளைகளுக்கும் கார், பசுமாட்டுடன் கன்று, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. 


.

2018 TopTamilNews. All rights reserved.