“திமுகவிடம் அஞ்சுக்கும் 10க்கும் தொங்கும் ‘நல்ல கட்சி’ காங்கிரஸ்” – கொளுத்தி போட்ட பழ.கருப்பையா!

 

“திமுகவிடம் அஞ்சுக்கும் 10க்கும் தொங்கும் ‘நல்ல கட்சி’ காங்கிரஸ்” – கொளுத்தி போட்ட பழ.கருப்பையா!

2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்கு 40 சீட்டுகள் கொடுத்ததால் தான் திமுக வெற்றியை நழுவவிட்டது என்ற கருத்து திமுக அனுதாபிகளிடையே நீண்ட நாளாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அதனை வெளிப்படையாகவே போட்டுடைத்தார். இதனால் மீண்டும் அந்தப் பரிசோதனைக்குள் இறங்க திமுக விருப்பம் காட்டவில்லை. அதைத் தான் தற்போதைய தொகுதிப் பங்கீட்டுக்கான இழுபறியும் உணர்த்துகிறது. இரண்டுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

“திமுகவிடம் அஞ்சுக்கும் 10க்கும் தொங்கும் ‘நல்ல கட்சி’ காங்கிரஸ்” – கொளுத்தி போட்ட பழ.கருப்பையா!

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே கமலுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் உலா வந்தது. அதனை காங்கிரஸ் மறுத்தாலும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடந்தது என்றே நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது கூட்டணிக்குள் காங்கிரஸை இழுக்கும் வகையிலும், திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் கொளுத்தி போடும் விதமாகவும் மக்கள் நீதி மய்யத்தில் சமீபத்தில் இணைந்த பழ.கருப்பையா பேசியிருக்கிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பழ. கருப்பையா, “காங்கிரஸ் தமிழகத்தில் வெற்றிபெற்று மீண்டும் கோலோச்ச போவதில்லை. அக்கட்சி தோற்றாலும் குடிமுழுகி போய்விடாது. ஒரு காலத்தில் திமுகவுக்கு நிகராக இருந்த காங்கிரஸ் இப்போது அக்கட்சியிடம் 10,15 இடத்திற்குத் தொங்கினால் மக்களின் மனதில் மட்டுமே இடம் கிடைக்கும். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழிக்கேற்ப காங்கிரஸ் இப்போது தமிழகத்தில் ஜொலிக்காவிட்டாலும் நல்ல கட்சி தான். பாஜகவை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று பேசினார்.