பாகிஸ்தான் வீரர் சாஹித் அப்ரிடி இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது – காரணம் இதுதான் #LPL

பாகிஸ்தான் வீரர் சாஹித் அப்ரிடி இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது – காரணம் இதுதான் #LPL

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதைப் போலவே இலங்கையில் எல்.பி.எல் போட்டிகள் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகின்றன.

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.

பாகிஸ்தான் வீரர் சாஹித் அப்ரிடி இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது – காரணம் இதுதான் #LPL

இதில் காலி கிளாடியேட்டர் அணியில் இடம்பிடித்தவர் பாகிஸ்தான் சாஹித் அப்ரிடி. அதிரடி பேட்ஸ்மேனான இவர் அந்த அணிக்குப் பெரும் பலம் எனக் கருதப்படுகிறது. இவர் ஏற்கெனவே திட்டப்படி திங்கட் கிழமை யன்று விமானம் மூலம் இலங்கைக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின் விளையாட அனுமதிக்கப்படுவார்.

பாகிஸ்தான் வீரர் சாஹித் அப்ரிடி இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது – காரணம் இதுதான் #LPL

ஆனால், சாஹித் அப்ரிடி திங்கள் கிழமை தான் செல்ல வேண்டிய விமானத்தைத் தவற விட்டுவிட்டார். அதனால், அவர் இலங்கை வருவது தாமதமாகிறது. அவர் இலங்கை வந்து, கொரோனா பரிசோதனைகள் முடிவடைந்து, தனிமை காலம் முடிந்து ஆட்டத்திற்குள் வருவதற்கு காலம் அதிகமாகி விடும். அதனால், அவர் காலி கிளாடியேட்டர் அணி ஆடவிருக்கும் முதல் இரண்டு போட்டிகளில் அப்ரிடி ஆட முடியாத நிலையாகி விட்டது. அப்ரிடி இல்லாதது அந்த அணிக்கு பெரும் இழப்புதான்.

கண்டி அணியிலிருந்து கேப்டன் மலிங்கா விலகியதும் குணரத்தினா கேப்டனாகினார். இப்படி ஒவ்வொருவரும் எல்.பி.எல் –ல் இணைவதில் சிக்கலாகி கொண்டே உள்ளது.