இலங்கை யாழ்ப்பாண LPL அணியில் பாகிஸ்தானின் சோயிப் மாலிக்!

 

இலங்கை யாழ்ப்பாண LPL அணியில் பாகிஸ்தானின் சோயிப் மாலிக்!

இலங்கையில் lpl போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண அணியில் வெளிநாட்டு வீரர்கல் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் போலவே, இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

இலங்கை யாழ்ப்பாண LPL அணியில் பாகிஸ்தானின் சோயிப் மாலிக்!

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.

கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் என்பதால் அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடக்கவிருக்கின்றன. மேலும், பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது சந்தேகமே என்றே கூறப்படுகிறது. ஏனெனில், இலங்கையில் தற்போதைய சூழலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடுவது என்பது கொரோனா வைரஸ் பரவலை அதிகப்படுத்தி விடும்.

இலங்கை யாழ்ப்பாண LPL அணியில் பாகிஸ்தானின் சோயிப் மாலிக்!

ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

இந்நிலையில் யாழ்ப்பாண ஸ்டலியன்ஸ் அணியில் ஆடும் வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிக் மாலிக் மற்றும் உஷ்மான் சின்வாரி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரவி போபாரா மற்றும் டோம் மூர்ஸ், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கைல் அபோட் மற்றும் டுவான் ஒலிவர் ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.