darbar
  • January
    27
    Monday

Main Area

Main



சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள்! இம்ரான் கான் அரசு அலட்சியம் 

பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தான் பெண்


பாகிஸ்தானின் 629 பெண்கள் திருமணம் என்ற பெயரில் சீனாவுக்கு கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இவ்வளவு தெரிந்தும் இம்ரான்கான் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

imran

பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்துகொள்ளும் சீனர்கள் அவர்களை சீனா அழைத்து சென்று பாலியல் தொழிலில் தள்ளுவதாக அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோரைத் தொடர்புகொண்டு கதறியதைத் தொடர்ந்து அந்த பெண் மீட்கப்பட்டார். தன்னை கடத்திய நபர் பற்றியும் அங்கு அவரைப் போல பல பெண்கள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

women

கடந்த ஜூன் மாதம் இந்த குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு இதை பெரிய விஷயமாக கருதவில்லை. இந்த நிலையில் உண்மை நிலையை கண்டறிந்து சர்வதேச செய்தி நிறுவனமான ஏபி வெளியிட்டள்ளது. அதில், விசாரணை தொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர், "வறுமை காரணமாக பெண்கள் சீனர்களை திருமணம் செய்துகொள்கின்றனர். அங்கு அவர்கள் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது குறித்து புகார் அளித்து, 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், மிரட்டல் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள், பெற்றோர் சாட்சியம் அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் 31 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. அரசுக்கு கவலையில்லை, குற்றவாளிகளை ஒன்றும் செய்ய முடியாது என்ற சூழலில் இன்னும் இதுபோன்ற கடத்தல் அதிகரிக்கத்தான் செய்யும்" என்றார்.

arrest

சமூக ஆர்வலர் இக்பால் என்பவர் கூறுகையில், "சீனா - பாகிஸ்தான் உறவில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக குற்றம் செய்த சீனர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இந்த விசாரணையை முடிந்தமட்டும் நிறுத்திவிடவே அரசு முயன்றது. தீவிரமாக விசாரணை நடத்திய அதிகாரியை மாற்றியது. ஒத்துழைக்க மறுத்தது. அமைச்சரிடம் பேச முயன்றோம்... அவர் இது பற்றி பேச மறுத்துவிட்டார். இது தொடர்பான செய்தியை வெளியிட வேண்டாம் என்று பத்திரிகைகளுக்கு நெருக்கடி கூட அளிக்கப்பட்டது. கடைசியில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்" என்றார்.

pakistan

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் உள்ளார். அந்த நாடு ஏற்கனவே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நேரத்தில் சீனாவை பகைத்துக்கொள்ள அரசு விரும்பவில்லை. அதனால்தான் இதை பெரிய விஷயமாக கருதாமல் உள்ளது என்று கூறப்படுகிறது. ஏபி வெளியிட்ட செய்தி மூலம் பாகிஸ்தான் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை பற்றிய செய்தி சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இனியாவது பாகிஸ்தான் - சீன அரசுகள் இந்த கொடுமைக்கு முற்றப்புள்ளி வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.