நாம உறங்கும்போது கொரோனா வைரசும் தூங்கும்… சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளுக்கு டப் கொடுக்கும் பாகிஸ்தான் அரசியல்வாதி

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரவமாக பரவி வருகிறது. அதேசமயம் பலர் கொரோனா வைரஸ் குணமாக அல்லது முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என பல விசித்திரமான யோசனை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர். சிலர் தனக்கு வந்த அது போன்ற செய்திகளை வாட்ஸ் அப் வாயிலாக பார்வேர்ட் செய்யும் கூத்துக்களும் அரங்கேறி வருகிறது.

 கொரோனா வைரஸ்

இந்த சூழ்நிலையில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கே தெரியாத கொரோனா வைரஸ் தொடர்பான அபூர்வமான ஒரு செய்தியை, பாகிஸ்தானின் நேஷனல் சபை உறுப்பினராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அரசியல்வாதியான பசல் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் செய்தியாளர் நைலா இனாயத் தனது டிவிட்டரில், பசல் உர் ரஹ்மான் பேசிய வீடியோவை,நாம் சாகும்போது வைரசும் சாகும். சிம்பிள் எனற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் தேசிய சபை

பசல் உர் ரஹ்மான் அந்த வீடியோவில், நாம தூங்கும் போது வைரசும் தூங்கும் ஆகையால் மக்கள் நீண்ட நேரம் உறங்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நீங்க நீண்ட நேரம் தூங்கினால் வைரசும் தூங்கும். அது உங்களுக்கு தீங்கு விளைவிக்காது. நீங்க தூங்கும் போது வைரசும் தூங்கும் மற்றும் நீங்க இறக்கும் போது அதுவும் சாகும் என பேசியுள்ளார். தற்போது இணையதளத்தில் அது சிரிப்பு வீடியோவாக படுவைரலாக பரவி வருகிறது. நம்ம ஊருல மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிபுத்திசாலி அரசியல்வாதி இருக்காங்கன்னு இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது.

Most Popular

கமலா ஹாரீஸ் வேட்பாளர் அறிவித்ததும் வந்த தேர்தல் நிதி இத்தனை மில்லியன் டாலரா?

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின்...

ஈரோடு அருகே மண்சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாப மரணம்!

தமிழகத்தில் கனமழையின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதனால் இன்று காலை முல்லை...

கொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்தியாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு...

‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்!

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன்(47) என்பவர், முன்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் இருக்கிறதாம். அதனால் இவர் மும்பையில் இருந்து...
Do NOT follow this link or you will be banned from the site!