T20 தொடரை வென்றது பாகிஸ்தான் – ஜிம்பாப்வே படுதோல்வி

T20 தொடரை வென்றது பாகிஸ்தான் – ஜிம்பாப்வே படுதோல்வி

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. ஒருநாள் ஆட்டங்களில் 3 போட்டிகள் முதலில் நடைபெற்றது. அதில் இரண்டில் பாகிஸ்தான் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

T20 தொடரை வென்றது பாகிஸ்தான் – ஜிம்பாப்வே படுதோல்வி

முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 156 ரன்களே எடுத்தன. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 7 பந்துகள் மிச்சமிருக்கும்போதே வெற்றி இலக்கை அடைந்தது.

இரண்டாம் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணியால் 134 ரன்களே எடுக்க முடிந்தது. அடுத்து பாகிஸ்தான் வீரர்கள் 15.1 ஓவரிலேயே வெற்றியைப் பறித்து விட்டார்கள்.

T20 தொடரை வென்றது பாகிஸ்தான் – ஜிம்பாப்வே படுதோல்வி

நேற்று நடந்த மூன்றாம் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் ஆடியது. ஆனாலும், 129 ரன்களே எடுத்தது. அந்த ஸ்கோரை பாகிஸ்தான் மிக எளிதாக 15.2 ஓவரிலேயே கடந்து தொடரையும் கைப்பற்றியது.

T20 தொடரை வென்றது பாகிஸ்தான் – ஜிம்பாப்வே படுதோல்வி

ஜிம்பாப்வே அணி மூன்றூ டி20 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியது. இந்தத் தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவிய உஸ்மான் காடிர் தொடர் நாயகனாகத் தேர்தெடுக்கப்பட்டார்.