பாகிஸ்தானில் கோரம்: நேருக்கு நேர் மோதிய எக்ஸ்பிரஸ்கள் – 30 பேர் பலி!

 

பாகிஸ்தானில் கோரம்: நேருக்கு நேர் மோதிய எக்ஸ்பிரஸ்கள் – 30 பேர் பலி!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இன்று சயித் எக்ஸ்பிரஸ், மிலத் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு பயணிகள் ரயில்கள் வெவ்வேறு வழித்தடங்களில் சென்றுகொண்டிருந்தன. இரு ரயில்களும் கிராஸ் செய்ய முயன்றபோது இரண்டு ரயில்களுமே தடம் புரண்டு ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கோரம்: நேருக்கு நேர் மோதிய எக்ஸ்பிரஸ்கள் – 30 பேர் பலி!

மேலும் ரயில் பெட்டிக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் பலர் பலத்த காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் பாகிஸ்தானில் 2005ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “இந்த அதிர்ச்சிகரமான ரயில் விபத்தில் 30 பேர் பலியாகி உள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் உடனே சென்று விரைவாக மீட்புப் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.