காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவருக்கு உயரிய விருது அளிக்கும் பாகிஸ்தான்!

 

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவருக்கு உயரிய விருது அளிக்கும் பாகிஸ்தான்!

காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலிஷா கிலானிக்கு விருதான நிஷான் எ பாகிஸ்தான் விருதை பாகிஸ்தான் அரசு வழங்கியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவருக்கு உயரிய விருது அளிக்கும் பாகிஸ்தான்!
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ளது. தற்போது இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட காஷ்மீரில் அமைதி நிலவுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஓராண்டாக ஊரடங்கு, இணையம், தொலைத் தொடர்பு துண்டிப்பு என்று காஷ்மீர் மக்கள் அவதியுற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்தை பா.ஜ.க-வினர் கொண்டாடும் நிலையில் இந்தியாவை வெறுப்பேற்றும் வகையில் காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு தங்கள் நாட்டின் மிக உயரி விருதை வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவருக்கு உயரிய விருது அளிக்கும் பாகிஸ்தான்!
காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் காஷ்மீர் பிரிப்பு தொடர்பாக ஹூரியத் மாநாடு அமைப்பு அது பற்றி வாய் திறக்கவில்லை என்று மிகக் கடும் விமர்சனங்களை சையத் அலிஷா முன் வைத்து சமீபத்தில் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார். அவருக்கு நிஷான் எ பாகிஸ்தான் விருது வழங்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 5ஐ கருப்பு தினமாக அனுசரிக்க, இந்தியா மீது சர்வதேச அளவில் அவதூறு பரப்ப பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.