• November
    13
    Wednesday

Main Area

Main



பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகிகளில் முதல் விக்கெட் காலி!

Mohsin Khan
Mohsin Khan

"உலககோப்பையை ஜெயிக்கிறீங்களோ இல்லையோ, இந்தியாகிட்ட மட்டும் தோத்துடாதீங்க செல்லங்களா" என்ற கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி அனுப்பி வைக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, ஏழாவது முறையாக ஏழரையாகிப்போனது. இந்தியா பாகிஸ்தான் போட்டியில் முதல் 20 ஓவர்களின்போதே பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸுக்கு முடிவு தெரிந்துவிட்டது. இன்னைக்கி நம்மளை விடிய விடிய‌ வெளிக்கி போறவரைக்கும் வெளுக்கப் போறாய்ங்க என்ற உண்மை அவருக்கு தெரிந்துவிட்டதுதான் கொட்டாவியாக வெளிப்பட்டது. ஒரு மேட்ச்தானே போனால் போகிறது என எடுத்துக்கொள்ள முடியாது.

Sarfraz Yawning

இதவரை ஆடிய 5 ஆட்டங்களில் ஒன்றே ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அரையிறுதி கனவு, கனவாகவே போய்விடும் அபாயம் இருக்கிறது. "ஒழுங்கா ஆடலேன்னா உருப்படியா ஊர்ப்போய்ச் சேரமுடியாது, எல்லாரும் கொலைவெறியில ஏர்ப்போர்ட்ல சுத்துவாய்ங்க" என சர்ஃப்ராஸ் சக வீரர்களுக்கு தைரியம் சொல்வதற்கு முன்னால் அதனை கண்ணாடி முன்னால் நின்று பலமுறை சொல்லிப் பார்த்திருக்கிறார். வீரர்கள் மட்டுமா சொதப்பியிருக்கிறார்கள், வீரர்களை தேர்வு செய்யும் கமிட்டியும் தவறு செய்திருக்கிறது என லைட்டை வேகவேகமாக அந்தப்பக்கம் திருப்பியிருக்கிறார்கள். செத்தான்டா சேகரு என பயந்த தேர்வுக்கமிட்டி தலைவர் மொசின் கான் உடனடியாக பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உலககோப்பை முடிந்தவுடன் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க, இலங்கை ஆகிய மூன்று அணிகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருப்பது உறுதி! 

2018 TopTamilNews. All rights reserved.