kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் பாகிஸ்தான்... எங்க போனாலும் பதிலடி கொடுக்க தயார்- இந்தியா..

சையத் அக்பருதீன்
சையத் அக்பருதீன்
Loading...

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதோடு  அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பிரதமர் நரேந்திர மோடி அரசின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புகார் பத்திரம் வாசித்தது. அதற்கு சீனாவும் ஒத்தி ஊதியது. இதனையடுத்து ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது. பல மணி நேரம் நடந்த கூட்டம் இறுதியில் எந்தவித முடிவும், அறிக்கையும் வெளியாகமால் முடிவடைந்தது. 

சிறப்பு சட்டப்பிரிவு  நீக்கம்

பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய ஆலோசனை கூட்டத்தில் சீனாவை தவிர வேறு எந்தநாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசவில்லை. ஆக காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு கடைசியில் தோல்விதான் கிடைத்தது. இருந்தாலும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து முட்டி மோதுகிறது. இந்நிலையில், நேற்று காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

சர்வதேச நீதிமன்றம்

பாகிஸ்தான் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் இது குறித்த கூறுகையில், ஒவ்வொரு நாடும் தங்களுக்கு கிடைக்கும் வழிமுறைகளை பயன்படுத்த அனுமதி உண்டு. எங்களிடம் வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அவர்கள் (பாகிஸ்தான்) எங்களை வெவ்வேறு இடங்களில் எதிர்க்க விரும்பினால் நாங்களும் அங்கேயே எதிர்கொள்வோம். அது (சர்வதேச நீதிமன்றம்) அவர்கள் விரும்பும் இடம். அவர்கள் முயற்சி செய்கிறார்கள் ஆனால் அவர்கள் வெற்றி பெற முடியாது என கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.