ஒற்றுமையை நிலைநாட்டிய கொரோனா… இந்தியாவிற்கு நிவாரணத்தை அறிவித்தது பாகிஸ்தான்!

 

ஒற்றுமையை நிலைநாட்டிய கொரோனா… இந்தியாவிற்கு நிவாரணத்தை அறிவித்தது பாகிஸ்தான்!

பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வட மாநிலங்கள் எங்கு காணினும் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி ஒரே நாள் பாதிப்பு எண்ணிக்கையில் மோசமான சாதனையை இந்தியா செய்திருக்கிறது.

ஒற்றுமையை நிலைநாட்டிய கொரோனா… இந்தியாவிற்கு நிவாரணத்தை அறிவித்தது பாகிஸ்தான்!

தும்பை விட்டு வாலை பிடித்த கதையாய் மீண்டும் படிப்படியாக முழு ஊரடங்கு எனும் இருளுக்குள் இந்தியா பயணித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் மக்கள் இந்தியர்களுக்கு உதவ தயாராக இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். தவிர பாகிஸ்தான் அரசுக்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ட்விட்டரில் #Pakistanstandwithindia என்ற ஹேஸ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

ஒற்றுமையை நிலைநாட்டிய கொரோனா… இந்தியாவிற்கு நிவாரணத்தை அறிவித்தது பாகிஸ்தான்!

உள்ளபடியே எல்லையில் இருக்கும் இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். பாகிஸ்தான் மக்களின் இந்தப் பேராதரவு அரசு தலைமை வரை எதிரொலித்திருக்கிறது. நேற்று ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “மிகக் கொடூரமான இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் இந்திய மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்க விரும்புகிறோம். அனைத்து மக்களும் குணம்பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம். மனிதகுலத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பேரிடரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து விரட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இந்தியாவுக்கான நிவாரணத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெண்டிலேட்டர், Bi PAP இயந்திரங்கள் , டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள், PPE கிட்கள் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக ஏதி என்ற பாகிஸ்தான் அறக்கட்டளை முதற்கட்டமாக இந்தியாவிற்கு 50 ஆம்புலன்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தது.