14 வயது சிறுமியை திருமணம் செய்த 62 வயது எம்பி!

 

14 வயது சிறுமியை திருமணம் செய்த 62 வயது எம்பி!

பாகிஸ்தான் எம்பி சலாவுதீன் அயூபி 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

14 வயது சிறுமியை திருமணம் செய்த 62 வயது எம்பி!

2018 முதல் பாகிஸ்தானில் சட்டமன்ற உறுப்பினராகவும், முட்டாஹிடா மாஜ்லிஸ் இ அமல் என்ற அரசியல் கட்சியை சேர்ந்தவருமான மவுலானா சலாவுதீன், அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக சித்ரால் பகுதியில் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் போலீசாருக்கு புகார் அளித்தது.

விசாரணையில் அந்த சிறுமி, பெண்கள் உயர்நிலை பள்ளியின் மாணவி என்றும் கடந்த 2006 ஆம் ஆண்டு பிறந்ததும் தெரியவந்தது. அந்நாட்டு சட்டத்தின்படி அச்சிறுமி, திருமண வயதை எட்டவில்லை. 62 வயதான எம்பி சலாவுதீன், அச்சிறுமியுடன் நிக்கா திருமண செய்து கொண்டதாகவும், ஆனால் முறையாக திருமண விழா ஏதும் நடத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தந்தை இதனை மறுத்துள்ளார். மேலும் 14 வயது மகளுக்கு திருமணம் செய்துவைக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.