புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

 

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தனது பங்கினை பாகிஸ்தான் நேற்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

2019 பிப்ரவரி 14ம் தேதியன்று காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ்சின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த மாதம் 26ம் தேதியன்று இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
பாகிஸ்தான் மத்திய அமைச்சர் பவாத் சவுத்ரி

நம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததால் புல்வாமா தாக்குதலை நாடாளுமன்ற தேர்தலுடன் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசை கடுமையாக தாக்கின. குறிப்பாக அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, பாகிஸ்தான் மற்றும் இம்ரான் கானும் வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றன. இது மோடிஜிக்கு அவர்களுடன் ரகசிய ஒப்பந்தம் உள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது. மோடிஜிக்கு உதவ தேர்தலுக்கு சற்று முன்னர் பிப்ரவரி 14ம் தேதியன்று எங்கள் வீரமிக்க 40 வீரர்களை பாகிஸ்தான் கொன்றதா? என்று எல்லோரும் கேட்கிறார்கள் என கடுமையாக மத்திய அரசை தாக்கி இருந்தார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
ராகுல் காந்தி

இந்த சூழ்நிலையில் நேற்று பாகிஸ்தானில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில், அந்நாட்டு மத்திய அமைச்சர் பவாத் சவுத்ரி பேசுகையில், நாங்கள் உள்ளே நுழைந்து இந்தியாவை தாக்கினோம். புல்வாமாவில் எங்களது சாதனை இம்ரான் கான் தலைமையில் ஒட்டு மொத்த சமூகத்தினதும் சாதனை. இதில் உங்களுக்கும் பங்கு உண்டு என தெரிவித்தார். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்களிப்பை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டதையடுத்து பா.ஜ.க. தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.