வெட்டுக்கிளி தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம்! – பழியைத் தூக்கிப்போட்ட மத்திய அமைச்சர்

 

வெட்டுக்கிளி தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம்! – பழியைத் தூக்கிப்போட்ட மத்திய அமைச்சர்

இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று மத்திய விவசாயத்து அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டுக்கிளிகள் மிகப்பெரிய அளவில் பயிர்களை அழித்து வருகின்றன. ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப்பிரதேச ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பருத்தி, பருப்பு வகைகள், காய்கறி விளைச்சல் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளி தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம்! – பழியைத் தூக்கிப்போட்ட மத்திய அமைச்சர்
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பழிபோடும் என்று சமூக ஊடகங்களில் பலரும் கிண்டலாக பதிவிட்டு வந்தனர். அவர்கள் கூறியதுபோல மத்திய விவசாயத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இது குறித்து கூறுகையில், “வழக்கமாக வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாகவே இந்தியாவுக்குள் நுழைகின்றன. ஜூன், ஜூலை மாதங்களில்தான் வெட்டுக்கிளிகள் இந்தியாவுக்குள் நுழையும். அப்போது அவை தங்கள் வாழ்வில் இறுதி நாட்களை அடைந்திருக்கும். ஆனால், கடந்த ஆண்டு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் தவறிவிட்டது. இதனால், இந்த ஆண்டு முன்னதாகவே வெட்டுக்கிளிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது” என்றார்.