‘ஆப்கானில் இருந்து வரும் வெங்காயம்’ பாகிஸ்தான் தாமதிப்பதால் வீணாவதாக புகார்!

‘ஆப்கானில் இருந்து வரும் வெங்காயம்’ பாகிஸ்தான் தாமதிப்பதால் வீணாவதாக புகார்!

ஆப்கானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும் வெங்காயங்களை, பாகிஸ்தான் சோதனை செய்ய தாமதிப்பதால் 70% வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

‘ஆப்கானில் இருந்து வரும் வெங்காயம்’ பாகிஸ்தான் தாமதிப்பதால் வீணாவதாக புகார்!

வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருவதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது போல, இந்த ஆண்டும் பாதிப்பு ஏற்படக் கூடாது என ஆப்கானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வெங்காயங்கள், பாகிஸ்தான் உடனான ஆப்கன் ஒப்பந்தப்படி அட்டாரி வாகா வழியாக பாகிஸ்தான் அனுமதித்து வருகிறதாம்.

‘ஆப்கானில் இருந்து வரும் வெங்காயம்’ பாகிஸ்தான் தாமதிப்பதால் வீணாவதாக புகார்!

இறக்குமதி செய்ய வரும் வாகனங்களை சோதனை செய்வதில் தாமதம் காட்டி, இந்தியா மீதான எதிர்ப்பை தெரிவிக்கிறது பாகிஸ்தான். இதனால், 70% வெங்காயங்கள் வீணாவதாகவும் 30% மட்டுமே இந்தியா கொண்டு செல்ல முடிகிறது என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும், இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் வர்த்தகம் பாகிஸ்தான் வழியாக அனுமதிக்கப்படுவதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.