• July
    17
    Wednesday

Main Area

Main



இன்னைக்கு ஜெயிக்கலைன்னா... போட்டியிலிருந்து வெளியேறுகிறது பாகிஸ்தான் அணி

இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான்
Loading...

காலையில் இருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் பரபரப்பாக இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மழை வருமா வராதா என்கிற பதைபதைப்பும் அடிவயிற்றில் டென்சனை ஏற்றிக் கொண்டிருக்கிறது. புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு இந்தப் போட்டி நடைபெறுவதால் உலகம் முழுக்கவே ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல.. அது போர் என்பது மாதிரியான பிம்பமாகவே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.


இன்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் நம்மை விட, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தான் பரிதாபத்திற்குள்ளாவார்கள். ஆமாம், இன்றைய போட்டியில் நிச்சயம் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாகிஸ்தான். அப்படி, இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்றால், உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்படும். ஆனாலும், இந்தியாவிற்கு அப்படியல்ல. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் தான் இந்திய அணிக்கு உள்ளது. மழையல் இன்றைய போட்டி தடைப்பட்டால், மீண்டும் இன்னொரு நாள் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில்லை. 


தற்போதைய இந்திய அணி வலுவாக உள்ளது. உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பலரால் கணிக்கப்பட்டு, உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறது. இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை, பாகிஸ்தான் வென்றதே இல்லை. இந்த முறையும் இந்தியா, பாகிஸ்தான் அணியைவிட நல்ல நிலையில் இருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்த வருடமும் பாகிஸ்தான் இந்தியாவை வெல்ல முடியாது என்பதே மூத்த கிரிக்கெட் வீரர்களின் கணிப்பாக இருக்கிறது.

2018 TopTamilNews. All rights reserved.