• February
    28
    Friday

Main Area

Main



தடை செய்யப்படுகிறதா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி..? அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை முழுவதுமாக கலைக்க வேண்டும் என ரசிகர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

pakistan

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக ஓவராக வாய் பேசிய பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. 
இதிலும் குறிப்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி அடைந்த படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
ரசிகர்கள் அனைவரும் பாகிஸ்தான் வீரர்களை வச்சு செய்து வரும் நிலையில், இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்றுள்ள ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணியை தடை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானின் கீழமை நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்துள்ளார். 

pakistan

பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில் அந்த ரசிகர் தொடர்ந்துள்ள வழக்கல், தற்பொழுது உள்ள பாகிஸ்தான் அணியையும், வீரர்களையும் ஒட்டுமொத்தமாக தடை கலைத்து விட்டு தேர்வுக்குழுவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இவரின் மனுவை ஏற்றுகொண்ட நீதிமன்றமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இது குறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.