பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

 

பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீனா ராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து டிக்டாக், ஹாலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்த அமெரிக்கா, அந்நாட்டிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசித்துவருகிறது. டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்காவும் பரிசீலித்துவருகிறது. டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் பயனர்களின் தரவுகளை திருடுவதாகவும், சீன அரசுக்கு உளவு பார்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கக்கேடு மற்றும் அநாகரிமான உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு தவறியதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்புதுறை அறிவித்துள்ளது. தவறான வீடியோக்கள் டிக்டாக் செயலியில் அதிகம் ஷேர் செய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசுக்கு அதிக புகார்கள் வந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாலும் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளாதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.