• February
    17
    Monday

Main Area

Main



கரடிகளும் காவிமயமாகின்றனவா? பஜனை கேட்க குடும்பத்தோடு வரும் கரடிகள்!

image source:AP
image source:AP

மத்தியபிரதேச மாநிலத்தின் சந்தால் பகுதியில் உள்ளது ராஜ்மாதா வனப்பகுதி. இங்குள்ள சோன் ஆற்றங்கரையில் ஒரு குடிசை கட்டி தனிமையில் வாழ்கிறார் சீத்தாராம் என்கிற துறவி. இவர் தினசரி பூஜைகள் செய்து, இசை மீட்டி பஜனைப்பாடல்களைப் பாடும்போது காட்டுக்குள் இருந்து இரண்டு கரடிகள் தினமும் வந்து இவரது பஜனைப் பாடல்களை மெய்மறந்து கேட்டு ரசிக்கின்றனவாம்!

source: News 18

தான் இங்கே வந்து குடிசை கட்டித் தங்கிய பொழுது ஒருநாள் நான் கண்மூடி பாடிக்கொண்டு இருந்தபோது யாரோ கவனிப்பதாக தோன்றியது.கண்ணை விழித்துப் பார்த்தால் இரண்டு கரடிகள் என் எதிரே நிற்பதைப் பார்த்தேன். முதலில் பயமாகத்தான் இருந்தது.ஆனால் அவை அமைதியாக என் இசையை கேட்பது புரிந்தது.பாடி முடித்து விட்டு அவைகளுக்கு பிரசாதம் கொடுத்தேன். மகிழ்ச்சியாக சாப்பிட்டு விட்டு போய்விட்டன. அதன் பிறகு எனக்கு பயம் போய்விட்டது.

அவை தானாக வந்து என் குடிசையின் அருகில் படுத்து இருக்கும்.நான் பாடினால் கேட்டுக்கொண்டு கண்மூடி லயித்திருக்கும்.ஒருநாளும் என் குடிசைக்குள் வந்ததில்லை.இப்போதெல்லாம் அந்தக் கரடிகள் தங்களுடைய இரண்டு குட்டிகளையும் அழைத்துவருகின்றன.அந்த கரடிகளுக்கு நான் லாலா,லாலி என்று பெயர்வைத்திருக்கிறேன்.அவற்றின் குட்டிகளை சுன்னு, முன்னு என்று அழைக்கிறேன். நான் பெயர் சொல்லி அழைக்கும்போது யாரை அழைக்கிறேன் என்பது அவற்றுக்குப் புரிகிறது என்கிறார் சீத்தாராமன்.

ஜெய்த்பூர் வனச்சரகத்தின் கண்காணிப்பாளர் சலீம் ஷா தானும் அந்த சாமியாரின் குடிசை இருக்கும் இடத்தருகே கரடிகள் நடமாடுவதைப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார். காவி அலை காட்டுக்குள்ளும் வீசுகிறதோ.

2018 TopTamilNews. All rights reserved.