வனத்துறை சார்பில் மலைகிராம மாணவர்களுக்கு ஓவிய போட்டி

வனத்துறை சார்பில் மலைகிராம மாணவர்களுக்கு ஓவிய போட்டி

கோவையில் வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு பழங்குடியின மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வனத்துறை சார்பில் மலைகிராம மாணவர்களுக்கு ஓவிய போட்டி

வனவிலங்குகள் வாரத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் ஆனைகட்டியிலுள்ள 19 மலைகிராம மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் ஒவியப்போட்டிகள் நடைபெற்றது. நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த 120 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

வனத்துறை சார்பில் மலைகிராம மாணவர்களுக்கு ஓவிய போட்டி

இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்ற 3 பேர் என 12 பேருக்கு சான்றிதழோடு, பரிசுப்பொருட்களை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் வழங்கினார். இந்த நிகழ்வில் பேசிய மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், வனத்தில் வசித்த முன்னோர்கள் எந்த பயமுமின்றி வாழ்ந்து வந்ததாகவும், தற்போது சூழல் மாறிவிட்டதை குழந்தைகள் உணர்ந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

வனத்துறை சார்பில் மலைகிராம மாணவர்களுக்கு ஓவிய போட்டி