விஞ்ஞானி என சுற்றி வந்த பெயிண்டர் – 8 பிரிவுகளில் கைது!

 

விஞ்ஞானி என சுற்றி வந்த பெயிண்டர் – 8 பிரிவுகளில் கைது!

விஞ்ஞானி என ஊரை ஏமாற்றி சுற்றி வந்த பெயிண்டரை தர்மபுரி மாவட்ட போலீசார் 8 பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஞ்ஞானி என சுற்றி வந்த பெயிண்டர் – 8 பிரிவுகளில் கைது!

தர்மபுரி பிடமனேரி பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான ஜெயபாண்டியன்(47), அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் செலுத்தி வந்தார். அறிவியல் கண்காட்சிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் புராஜக்டுகளுக்கு பயன்படும் வகையில் அவ்வப்போது சில மாடல்களை வடிவமைத்து கொடுத்து வந்துள்ளார்.
இதனால், அப்பகுதியில் அனைவரிடமும் தன்னை விஞ்ஞானி என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் போன்ற மாடலை உருவாக்கி, அதில் முறைகேடுகள் செய்ய முடியும் என்று கூறி வந்தார்.

விஞ்ஞானி என சுற்றி வந்த பெயிண்டர் – 8 பிரிவுகளில் கைது!

இது பற்றி தான் செய்யும் செயல்முறை விளக்கத்தை பார்த்து விட்டு அரசு அதிகாரிகள் அதை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கூறி வந்தார். ஆனால், அதிகாரிகள் யாரும் தன் கோரிக்கையை ஏற்கவில்லை எனக் கூறியும், ஈவிஎம் இயந்திரம் பற்றியும் அவதூறாக சமூக ஊடகங்களில் சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், பிரதமர், முதல்வர், அரசியல் தலைவர்களின் போட்டோக்களை செருப்பால் அடித்ததுடன், மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளையும் அவதூறாக பேசியிருந்தார். இதையடுத்து தர்மபுரி பி 1 காவல் நிலைய போலீசார் , அவர்மீது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

விஞ்ஞானி என சுற்றி வந்த பெயிண்டர் – 8 பிரிவுகளில் கைது!