“மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது” பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம்!!

“மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது” பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம்!!

மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது என பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது” பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம்!!

சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாகவும் , அரைகுறை ஆடைகளுடன் வந்து வகுப்பு எடுப்பதாகவும் புகார் எழுந்தது . இதுகுறித்து அசோக் நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை 3 நாட்கள் விசாரணைக்கு எடுத்து காவல்துறை விசாரணை செய்ததில் , பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான்; இது குறித்து தெரிந்தும் பள்ளி நிர்வாகம் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தியாகராயர் நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.

“மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது” பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம்!!

இந்நிலையில் சமூக வலைதளத்தில் புகார் வருவதற்கு முன்பு மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது என பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் தரப்பில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பதிலளித்துள்ளனர். பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் இருவரிடமும் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர்கள் பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.