குடியரசு தினத்தையொட்டி பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் விருது அறிவிப்பு!

 

குடியரசு தினத்தையொட்டி பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் விருது அறிவிப்பு!

குடியரசு தின விழாவை ஒட்டி மொத்தம் 102 பேருக்கு விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

குடியரசு தினத்தையொட்டி பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் விருது அறிவிப்பு!

இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், பிரபல பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 103 வயதிலும் விவசாயம் செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கோவை தொழிலதிபர் சுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரைக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.