“கீழ்பவானி பாசன பகுதிகளில் 20 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்” – ஆட்சியர் கதிரவன் தகவல்

 

“கீழ்பவானி பாசன பகுதிகளில் 20 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்” – ஆட்சியர் கதிரவன் தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளில் நாளை முதல் 20 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயனடையும் விதமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நாளை முதல் 20 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“கீழ்பவானி பாசன பகுதிகளில் 20 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்” – ஆட்சியர் கதிரவன் தகவல்

இதன்படி, நாளை நசியனூர், பவானி, அம்மாபேட்டை, கவுந்தப்பாடி உள்ளிட்ட 8 இடங்களிலும், வரும் 25ஆம் தேதி கொடுமுடி, வெள்ளோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், சிவகிரி உள்ளிட்ட 12 இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார். அத்துடன், விவசாயிகளின் நலன் கருதி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கொள்முதல் நிலையங்கள், கீழ்பவானி பாசனப் பகுதிகளில் அறுவடை பணிகள் முடியும் வரை தொடர்ந்து செயல்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு கொள்முதல் நிலையங்களில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 958 ரூபாய், சாதாரண ரகம் ஆயிரத்து 918 ரூபாய் என்ற வீதத்தில் கொள்முதல் செய்யப்படும் என்றும் ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.