தேவையான இடங்களில் நெல் கொள்முதல் மையங்களை திறக்கலாம் : அமைச்சர் காமராஜ்

தேவையான இடங்களில் நெல் கொள்முதல் மையங்களை திறக்கலாம் : அமைச்சர் காமராஜ்

நெல் கொள்முதல் மையங்களை திறக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் நெற்பயிர்களின் அறுவடை முடிந்த பிறகு, அதனை அரசின் நெல் கொள்முதல் மையங்களில் விற்பது வழக்கம். ஆனால், இந்த முறை மழைக்காலத்துக்கு முன்பாகவே மழை பெய்ய தொடங்கிவிட்டதால் அறுவடை செய்த பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டதாகவும் நெல் கொள்முதல் மையம் மூடப்பட்டிருப்பதால் நெல்லை விற்க முடியாமல் தவித்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தேவையான இடங்களில் நெல் கொள்முதல் மையங்களை திறக்கலாம் : அமைச்சர் காமராஜ்

குறிப்பாக, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் இன்று முதல் திருவாரூரில் மையங்கள் திறக்கப்படும் என்றும் குவிண்டாலுக்கு ரூ.53 கூடுதலாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் காமராஜ் அறிவித்தார். இந்த நிலையில், திருவாரூர் மட்டும் அல்லாது தேவைப்பட்ட எல்லா இடங்களிலும் நெல் கொள்முதல் மையங்களை திறக்க அனுமதி வழங்கி ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

தேவையான இடங்களில் நெல் கொள்முதல் மையங்களை திறக்கலாம் : அமைச்சர் காமராஜ்

மேலும், 2019-20ல் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.