“நெல் ஈரப்பத அளவு விவகாரம் – 24ஆம் தேதி மத்திய குழு வருகை”

“நெல் ஈரப்பத அளவு விவகாரம் – 24ஆம் தேதி மத்திய குழு வருகை”

நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவது குறித்து, ஆய்வுசெய்ய வரும் 24ஆம் மத்திய குழு வர உள்ளதாக, நுகர்பொருள் வாணிபகழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி தெரிவித்துள்ளார்.

“நெல் ஈரப்பத அளவு விவகாரம் – 24ஆம் தேதி மத்திய குழு வருகை”
“நெல் ஈரப்பத அளவு விவகாரம் – 24ஆம் தேதி மத்திய குழு வருகை”

தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் நடந்த ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் பேசிய சுதாதேவி, குறுவையில் தற்போது 77 சதவீதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 90 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யவேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 1000 மூட்டைகளுக்கு மேல் வரத்துள்ள 25 இடங்களில் கூடுதலாக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தொடர் மழைபெய்து வருவதால் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்து ஆய்வுசெய்ய மத்திய குழு வரும் 23ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அந்த குழு 24ஆம் தேதி முதல் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வுசெய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நெல் ஈரப்பத அளவு விவகாரம் – 24ஆம் தேதி மத்திய குழு வருகை”