• March
    30
    Monday

Main Area

Mainபெரியாருக்கு மாலை போடுறத விட்டுட்டு, அவர் கருத்தில் வாழ பழகுங்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்

pa ranjith
pa ranjith

கடந்த 15 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டைஅன்பகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி,  “கண்ட கண்ட நாயெல்லாம் திமுகவைப் பற்றி பேசுகிறது. எச். ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம் இருக்கிறது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு  உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது,டிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது” என பேசியிருந்தார். 

hraja

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “நான் என்னைப்பற்றி பேசினால் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் R(oad) S(ide) பாரதி தலித் சமுதாயத்தை கொச்சை படுத்தியது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.தொடர் தர்ணா போராட்டம் நடத்த தலித் சகோதரர்கள் வற்புறுத்துகின்றனர்” என பதிவிட்டுள்ளார். 

 

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்,  “பார்ப்பனிய வர்ண அடுக்குகளுக்கு எதிராக அயோத்திதாசர் தொடங்கிய திராவிட, தமிழ் உணர்வின் தொடர்ச்சியில் பெரியாரும் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் இன்று பெரியாரையும் மறந்து(மறுத்து) விட்டார்கள் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள்  நமக்கு உணர்ந்துகின்றன! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன் தொடங்கி அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன், எல்.சி குருசாமி, எம்.சி ராஜா,புரட்சியாளர் அம்பேத்கர்,  சிவராஜ், மீனாம்பாள், சத்தியவாணிமுத்து இன்னும் எத்தனை எத்தனையோ பெயர் தெரியாத போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை அவர்களின் போராட்ட வரலாற்றை மறுத்து பிச்சை என்று சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள்.  பெரியார் பார்வையை மறந்து விட்ட உங்களுக்கு அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முன்னோடிகளை படமாக ஆக்கி அஞ்சலி செலுத்துவதை விட , முதலில் அவர்களை கருத்தில் இருக்க பழகுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

2018 TopTamilNews. All rights reserved.