உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நய்யாண்டி !

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நய்யாண்டி !

உடுமலைப்பேட்டையில் கவுசல்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் சங்கர் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கில், கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.   அவரது தாய்மாமன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும் திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நய்யாண்டி !

அதன் பின்னர் அவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மரண தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனிடையே சக்தி என்ற பறை இசைக் கலைஞரை கடந்த 2018 ஆம்  டிசம்பர் மாதம்  கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகு போன்றவர்கள் முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.  கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நய்யாண்டி !

உடுமலை சங்கர் கொலை சம்பந்தமான  அனைத்து வழக்கின் தீர்ப்புகளும் இன்று வெளியானது. அதில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை  விடுதலை செய்தும் மற்ற 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் 3 பேரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் நய்யாண்டி செய்துள்ளார்.  இதற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் கூறி வருகின்றனர்.